மேம்பாலம் கட்டும் பணிக்காக பொக்லைன் எந்திரம் மூலம் 96 வீடுகளை அதிகாரிகள் இடித்து அகற்றினர். கோயம்புத்தூர் மாவட்டம் பல்லடம் காவல் நிலைய பகுதியில் இருந்து ஆற்று பாலம் வரை மேம்பாலம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் உக்கடம்-பைபாஸ் சாலையில் ஏறுதளம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்றதால் அந்த பகுதியில் இருந்த தூய்மை பணியாளர்களின் குடியிருப்புகள் இடிக்கப்பட்டு அவர்களுக்கு மாற்று வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அங்கு வசித்த சலவைத் தொழிலாளர்களுக்கு மாற்று வீடுகள் ஒதுக்கீடு […]
