லட்சத்தீவில் வளர்ச்சி என்ற பெயரில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகளுக்கு எதிராக ஓய்வுபெற்ற 93 ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். லட்சத்தீவில் வளர்ச்சி என்ற பெயரில் புதிய நிர்வாக அதிகாரியான பிரபுல் பட்டேல் அங்குள்ள மக்களின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் பல மாற்றங்களை செய்து வருகிறார். இதனால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தரப்புகளும் லட்சத்தீவுக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். மேலும் கேரளாவில் சட்டப்பேரவையில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. […]
