ராமநாதபுரம் மாவட்டத்தில் 91 வயது முதியவர் நடத்தும் சிலம்ப பயிற்சி கூடத்தில் இளைஞர்கள் ஆர்வத்துடன் சிலம்பம் பயின்று வருகின்றனர். முதுகளத்தூர் அடுத்த சிறுமணி ஏந்தல் கிராமத்தில் கருவேல மரங்கள் நிறைந்த கரட்டுக்காட்டுக்குள் கம்பீரம் குறையாமல் மிரட்டுகிறது ஒரு முதியவரின் குரல். மெதுவாக உள்ளே சென்றால் சிறியவர், இளையவர், இளம் பெண்கள், குடும்ப பெண்கள் என பலரும் அனாயசமாக சுற்றுச் சுழன்று சிலம்பம் வீசி மிரட்டல் விடுக்கின்றனர். சுதந்திர போராட்ட வீரரும் சிலம்பாட்டத்தில் நிபுணருமான துரைராஜ் என்ற 91 […]
