காய்ச்சல் ஏற்பட்டதால் சிறுவன் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் மாரிமுத்து என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு ஒன்பது வயதில் முகில் செல்வன் என்ற மகன் இருந்தான். இந்நிலையில் முகில் செல்வதற்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது பெற்றோர் அவரை ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளான். அங்கு சிறுவனுக்கு தீவிர […]
