விசேஷ தினங்களை முன்னிட்டு உழவர் சந்தையில் வியாபாரம் களைகட்டிய நிலையில் 9 லட்சத்திற்கு காய்கறிகள் விற்பனையாகியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கோட்டை பகுதியில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறி மற்றும் பழங்களை விற்பனைக்காக கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். தற்போது பண்டிகை நாட்கள் மற்றும் விசேஷ தினங்கள் என்பதால் மும்முரமாக விற்பனை நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று நடைபெற்ற உழவர் சந்தையில் […]
