தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட்தேர்வு முறையானது சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறு பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அவற்றை சரிசெய்யும் வகையில் இம்முறை க்கு மாற்றாக அனைவரும் பயன்பெறும் வகையிலான மாணவர் சேர்க்கை முறைகளை வகுத்து அவற்றை நடைமுறைப் படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றியும், அவற்றிற்கான சட்ட வழிமுறைகள் பற்றியும் முழுமையாக ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரை களை அளித்திட ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் அவர்கள் […]
