சீனாவில் ரயில் மோதிய விபத்தில் பராமரிப்பு பணியை செய்து கொண்டிருந்த ரயில்வே ஊழியர்கள் 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவிலிருக்கும் ஷிங்சாங் நகரில் ரயில்வே தண்டவாளத்தை சீரமைக்கும் பணியை சுமார் 50க்கும் மேலான ரயில்வே ஊழியர்கள் செய்து கொண்டிருப்பதால் ரயில்வே தண்டவாளத்தை சிறிது தூரத்திற்கு மூடி வைத்துள்ளனர். இதனிடையே சீனாவின் ஹாங்சவ் நகரிலிருந்து எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று நூற்றுக்கணக்கான பயணிகளை ஏற்றிக்கொண்டு தண்டவாளத்தை சீரமைக்கும் பணி நடந்து கொண்டிருக்கும் நகரமான ஷிங்சாங்கை கடந்து ஹாங்சவ்விற்கு […]
