உச்சநீதிமன்றத்திற்கு புதிதாக 9 நீதிபதிகளை நியமிக்க மத்திய அரசுக்கு கொலீஜியம் பரிந்துரை செய்தது. உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் தேர்வுக் குழு கொலீஜியம் என்று அழைக்கப்படுகிறது. இந்தக் குழுவில் தலைமை நீதிபதி மற்றும் நான்கு மூத்த நீதிபதிகள் இடம்பெற்றுள்ளனர். இதையடுத்து கொலீஜியம்பரிந்துரைத்த மூன்று பெண் நீதிபதிகள் உட்பட 9 பேரை நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நீதிபதிகள் நியமனம் தொடர்பான கோப்பை குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கேரளா ஹைகோர்ட் நீதிபதி சி.டி ரவிக்குமார், கர்நாடக […]
