அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் 9 நாட்கள் விடுமுறை அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அரையாண்டுத் தேர்வு முடிந்த பின்பு கிறிஸ்துமஸ், புத்தாண்டு முன்னிட்டு ஒருவாரம் விடுமுறை வழங்குவது வழக்கம். இந்த ஆண்டு அரையாண்டு தேர்வு நடை பெறவில்லை என்றாலும் டிசம்பர் 25ஆம் தேதி முதல் ஜனவரி இரண்டாம் தேதி வரை 9 நாட்கள் விடுமுறை அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. […]
