உக்ரைனில் இருந்து 9 ஆயிரம் இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. உக்ரைனில் 6-வது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைனில் உள்ள இந்தியர்களை வெளியேற்ற எல்லைக்கு அருகில் உள்ள ரஷ்ய நகரமான பெல்கோரோடில் இந்தியக் குழு ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
