நியூசிலாந்தில் துப்பாக்கிச்சூட்டில் எடுக்கப்பட்ட வீடியோவை பதிவேற்றிய பிறகு எவ்வளவு தான் தடுத்தாலும், தீவிரவாத ஆதரவுக் குழு ஒன்று உலகம் முழுவதும் பரப்பியதாக பேஸ்புக் நிறுவனம் கூறியதாக தகவல் வெளிவந்துள்ளது. நியூசிலாந்தில் கிறிஸ்ட் நகரில் உள்ள மசூதிகளில் கடந்த வாரம் தொழுகையில் ஈடுபட்டிருந்த மக்களை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இந்த துப்பாக்கி சூட்டில் 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துப்பாக்கி சூடு நடத்திய முக்கிய நபரான பிரெண்டன் டாரன்ட் என்ற அந்த தீவிரவாதி, துப்பாக்கி சூடு நடத்திய வீடியோவை நேரடியாக ஒளி […]
