சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு புதிதாக 87 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வூஹான் மாகாணத்தில் முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது வரை உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஆனால் சீன அரசு தீவிர நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்ததன் மூலம் தொற்று பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வந்தது. இருப்பினும் சீனாவில் மீண்டும் டெல்டா உள்ளிட்ட உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்கள் சமீபகாலமாக அதிகரித்து கொண்டே […]
