லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நேற்று முன்தினம் தன் 38வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது விக்னேஷ் சிவன் தன் சமூகவலைத்தளத்தில் நெகிழ்ச்சியுடன் நயன்தாராவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிலையில் நயன்தாராவின் பிறந்தநாளையொட்டி அவரது நடிப்பில் உருவாகும் 81வது திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியது. அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடித்த எதிர் நீச்சல், காக்கி சட்டை, தனுஷ் நடித்த கொடி, மற்றும் பட்டாஸ் போன்ற படங்களை இயக்கிய துரை செந்தில் குமார் இயக்கும் படத்தில் நயன்தாரா முக்கியமான வேடத்தில் நடிக்கவுள்ளார். […]
