80 வயது முதியவர் ஒருவர் 29 வயது இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். தென்ஆப்பிரிக்கா நாட்டின் கேப்டன் நகரத்தில் வசிக்கும் 29 வயதாகும் இளம்பெண்ணின் பெயர் டெர்சல் ராஸ்மஸ். சட்டக் கல்லூரியில் படித்துக்கொண்டு உள்ளூர் பத்திரிகையில் வேலை செய்து வருகிறார். கடந்த 2016ஆம் ஆண்டு உள்ளூர் செய்தித்தாள் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட டெர்சல் ராஸ்மஸ் சென்றபோது, 80 வயதான வில்சன் ராஸ்மஸ் என்ற முதியவரை சந்தித்துள்ளார். எப்படியோ இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. […]
