இந்த ஆண்டு ஜப்பானில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடத்தக்கூடாது என்று அந்நாட்டில் 80 சதவீத மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உலக நாடுகள் முழுவதும் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஜப்பான் நாட்டிலும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் டோக்கியோ, ஒசாகா மற்றும் பெரு நகரங்கள் உட்பட 10 மாகாணங்களில், கொரோனா கட்டுப்பாடு விதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களுக்கு குறிப்பிட்ட நேரம் வரை அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கும் , மற்ற அனைத்திற்கும் தடை […]
