இங்கிலாந்தின் தலைநகரில் காவல்துறையினர் கடந்தாண்டு நடத்திய சோதனையில் காருக்குள் போதைப்பொருட்கள் வைத்திருந்ததாக கூறி கைது செய்யப்பட்ட ஓட்டுநருக்கு நீதிமன்றம் 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது . லண்டனிலிருக்கும் Brent டிலுள்ள சாலையில் காவல் துறையினர் கடந்தாண்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது காவல்துறையினர் அங்கு வந்த காரை மறித்து சோதனை செய்தனர். இதனையடுத்து காரினுள் போதைப் பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்த காவல்துறையினர், அதனை ஓட்டிக் கொண்டு வந்த Azeem என்பவரை கைது செய்தனர். […]
