கர்நாடக மாநில வாரியத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 7 மற்றும் 8ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என கர்நாடக தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வி அமைச்சர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். வருடந்தோறும் பள்ளிகளில் இறுதித் தேர்வுகள் வழக்கமாக பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறும். புதிய அமர்வு பொதுவாக ஏப்ரல் மாதத்தில் தொடங்குவது வழக்கம். ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தற்போது அனைத்து கல்வி நிறுவனங்களும் இந்தியாவில் மூடப்பட்டுள்ளன. அனைத்து பள்ளிகளும் குறிப்பிட்ட காலத்திற்கு மூடப்பட்டுள்ளன. […]
