சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் சீமாத்தமன் நகரில் கூலி தொழிலாளியான முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புனிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் மகள் சர்மி(12) அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 8- ஆம் வகுப்பும், மகன் கமலேஷ் 2- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்கு வந்து சர்மி தனது தந்தையை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தம்பி சரியாக படிக்காததால் நான் அவனை அடித்துவிட்டேன் என கூறியுள்ளார். […]
