சீனாவின் சரக்குக் கப்பலுடன் எண்ணெய் கப்பல் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் எட்டு மாலுமிகள் உயிரிழந்துள்ளனர். சீனாவின் ஷாங்காய் நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள மஞ்சள் கடலில் எண்ணெய் கப்பல் ஒன்று 3 ஆயிரம் டன் பெட்ரோலை ஏற்றிக் கொண்டு சென்றுள்ளது. அந்த கப்பல் யாங்ட்சி நதி முகத்துவாரம் அருகே சென்று கொண்டிருந்த போது, மாலன் மற்றும் ஜல்லிகளை ஏற்றி வந்த சரக்குக் கப்பலுடன் பயங்கரமாக மோதியுள்ளது. அப்போது கப்பலில் இருந்த என்னை திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. […]
