ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பெண்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சோழம்பட்டு கிராமத்தில் வசிக்கும் 8 பெண்கள் விவசாய கூலி வேலை பார்ப்பதற்காக சமத்துவபுரத்திற்கு சென்றுள்ளனர். அங்கு வேலை முடிந்த பிறகு 8 பேரும் சொந்த ஊருக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். இந்த ஆட்டோ நெடுமானுர் பால் கூட்டுறவு சங்கம் அருகே சென்றது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ தாறுமாறாக ஓடி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் […]
