ரஷ்ய நாட்டின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுப்பதற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யப்படைகள் தொடர்ந்து எட்டாம் நாளாக கடும் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டின் பெரும்பாலான ராணுவ இலக்குகள் ரஷ்ய படைகளால் அழிக்கப்பட்டிருக்கின்றன. உக்ரைனும் இத்தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதால் இரு தரப்பிலும் உயிர் பலிகள் அதிகம் ஏற்பட்டிருக்கின்றன. இந்நிலையில், உக்ரைன் மீது போர் தொடுப்பதற்கு எதிராக, ரஷ்யாவின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடக்கிறது. […]
