உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்று பரவல் வரலாறு காணாத அளவிற்கு பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் மட்டுமல்லாமல் எல்லா நாடுகளிலும் வேலையில்லாத் திண்டாட்டம் நிலவி வருகிறது. அந்த வகையில், அரியானாவில் உள்ள தனியார் நிறுவன வேலை வாய்ப்புகளில் உள்ளூர் மக்களுக்கு 75 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் நடைமுறை இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்கான புதிய சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் 30,000 வரை சம்பளம் மற்றும் கூலி வழங்கப்படும் வேலைகளுக்கு இச்சட்டம் பொருந்தும். […]
