73 வயதான ஆசிரியை ஒருவர் தனக்கு மணமகன் தேவை என்று விளம்பரம் செய்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. கர்நாடக மாநிலத்தில் மைசூர் பகுதியில் 73 வயதான ஓய்வு பெற்ற ஆசிரியை ஒருவர் வாழ்ந்து வருகிறார். இவர் தனக்கு மணமகன் தேவை என்று விளம்பரம் செய்துள்ளார். இந்த விளம்பரத்தில் அவர் சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளார். அது என்னவென்றால் தன்னை விட மூன்று வயது அதிகமாகவும் நல்ல ஆரோக்கியத்துடனும் பிராமண சமூகத்திலும் மாப்பிள்ளை இருக்க வேண்டும். […]
