லெபனான் நாட்டிலிருந்து வந்த படகு சிரியா நாட்டின் அருகில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அகதிகள் 73 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லெபனான் நாட்டில் பஞ்சம் அதிகரித்திருக்கிறது. எனவே, மக்கள் அதிகமானோர் கடல் வழியே ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பி கொண்டிருக்கிறார்கள். லெபனான் நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு பண மதிப்பு 90 சதவீதம் சரிவடைந்திருக்கிறது. மேலும், லட்சக்கணக்கான மக்கள் தங்கள் பணியை இழந்திருக்கிறார்கள். இதன் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வறுமை நிலையில் தவித்து வருகின்றன. இந்நிலையில் நாட்டில் இருந்து […]
