ரஷ்யாவில் உணவு தேடி 700 கிலோ மீட்டர் தூரம் வரை பயணித்து ஊருக்குள் வந்த பனிக்கரடியை வனத்துறையினர் மீட்டனர். ரஷ்யாவில் திலிசிக்கி (Tilichiki) என்ற கிராமத்தில் பனிக்கரடி ஓன்று புகுந்துள்ளதாக அப்பகுதியினர் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த அதிகாரிகளுக்கு ஒரு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. அதிர்ச்சி என்னவென்றால் திலிசிக்கி கிராமம் பனிக்கரடிகளின் நடமாடும் இடத்தில் இருந்து சுமார் 700 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலையில் பனிக்கரடி ஊருக்குள் வந்தது ஆச்சரியத்தையும், அதிசயத்தையும் ஏற்படுத்தியது. […]
