பாகிஸ்தானில் நேற்று ஒரே நாளில் 7,195 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. பாகிஸ்தானில் கொரோனா தொற்று சமீப தினங்களில் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் தற்போது வரை இல்லாத அளவிற்கு நேற்று ஒரே நாளில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் கொரோனா தீவிரமடைந்து வரும் நிலையில், அங்கு தற்போது வரை ஊரடங்கு விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
