சென்னையில் மக்கள் குறைவாக பயணிப்பதால் 70 மினி பேருந்துகள் சேவை நிறுத்தப்படுவதாக மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெரும் வரவேற்பு பெற்ற திட்டங்களில் ஒன்று மாநகர பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட மினி பேருந்து சேவை. ஆரம்பத்தில் மக்கள் அதிகம் பயன்படுத்திய இந்த சேவைக்கு, கொரோனா காலகட்டத்திற்கு பிறகு வரவேற்பு குறைந்து விட்டதாகவும், மக்கள் மிகக்குறைவாகவே பயணிப்பதால் 70 மினி பேருந்துகள் சேவை நிறுத்தப்படுவதாகவும், பள்ளிகள் திறக்கப்பட்டால் சிறிய பேருந்துகள் முழுமையாக இயக்கப்படும் என்றும் […]
