வீடு புகுந்து 70 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆர்எம்எஸ் காலனி அசோக் நகர் பகுதியில் நாகலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ரயில்வே ஊழியர். இவருடைய தங்கை மகளுக்கு வருகிற 7-ம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக திருமணத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக நாகலட்சுமி மற்றும் அவருடைய தாயார் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று இருந்தனர். இவர்கள் வீட்டிற்கு திரும்பி வந்து […]
