திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த ஒரு சிறுமி அதே பகுதியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 12-ஆம் தேதி அப்பகுதியை சேர்ந்த நவரசன் என்பவர் சிறுமியை தனியாக வீட்டுக்கு அழைத்துச் சென்று கத்தியை காட்டி மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளார். நடந்ததை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதையடுத்து சிறுமி நடந்ததை பெற்றோரிடம் கூறினார். உடனே இந்த சம்பவம் குறித்து மகளிர் போலீசாரிடம் புகார் […]
