ஜம்முகாஷ்மீர் மாநிலம் பஹல்காமிலுள்ள சந்தன்வாரி அருகில் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்படையினர் சென்ற வாகனம் இன்று விபத்துக்குள்ளானதில் 7 இராணுவ வீரர்கள் இறந்தனர். பிரிஸ்லான் என்ற இடத்தில் அவர்களின் வாகனம் சாலையில் கவிழ்ந்து ஆற்றங்கரையில் விழுந்ததில் சுமார் 30 வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். அதாவது அமர்நாத் யாத்திரை பாதுகாப்பு பணிக்காக அனுப்பப்பட்ட ITBP இராணுவ வீரர்கள் பணியிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கும்போது, இச்சம்பவம் நடந்துள்ளது. 37 ஐடிபிபி (ITBP) பணியாளர்கள் மற்றும் 2 போலீஸ்காரர்களுடன் சென்ற பேருந்து சந்தன்வாடி மற்றும் […]
