தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு இதுவரை 7 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டியில் தொட்டபெட்டா மலைச் சிகரம், படகு இல்லம், பைக்காரா படகு இல்லம் போன்றவை செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கோடை சீசனை முன்னிட்டு பல்வேறு சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு சென்று வருவர். அப்போது சுற்றுலா பயணிகளுக்கு அங்குள்ள ஹோட்டல் அறைகளில் ஒரு நாளைக்கு தங்குவதற்கான வாடகை 1500 முதல் 3,000 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. […]
