குஜராத்தில் 7.5 லட்சம் மரக்கன்றுகளை நட்ட முதியோர் இல்ல உரிமையாளர் அடுத்த 20 ஆண்டுகளில் குஜராத்தை பசுமையாக்க உறுதிமொழி எடுத்துள்ளார். குஜராத்தின் ராஜ்கோட் நகரில் சத்பவன விருத்தாஷ்ரம் என்ற பெயரில் அரசு சாரா அமைப்பு சார்பில் முதியோர் இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த முதியோர் இல்லத்தின் உரிமையாளர் விஜய் தோப்ரியா. இவர் இதுவரை 7.5 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: “நாங்கள் இதுவரை மரங்களை பாதுகாக்கும் பகுதியில் 5 லட்சம் மரக்கன்றுகள […]
