மியான்மரில் ராணுவத்தினர் இரவு நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்து ,7 வயது சிறுமியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மியான்மர் நாட்டில் ராணுவத்திற்கு எதிரான போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. அதேசமயம் பொது மக்களின் போராட்டங்களை அடக்குவதற்காக, ராணுவம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் தற்போது வரை சுமார் 260 க்கு அதிகமான போராட்டக்காரர்கள் ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனால் பகலின் போராட்டம் நடத்தும் பொதுமக்களை ,ராணுவத்தினர் […]
