அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம்-கூடலூர் சாலையில் உள்ள ஒரு தோட்டத்தில் வைத்து சட்டவிரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கம்பம் தெற்கு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டியன் தலைமையில் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி சாக்கு மூட்டைகளுடன் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை […]
