கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள சின்னபொம்பட்டி கிராமத்தில் பிரபு என்பவர் வசித்துவருகிறார். இவரது மனைவி நித்யா. இவர் 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அங்கு மருத்துவர்கள் இல்லாததால் வீட்டிற்கு செல்லும் படி மருத்துவத்துறை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து வெள்ளிக்கிழமை வீட்டிற்கு திரும்பி மறுபடியும் சனிக்கிழமை காலை அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் […]
