திருப்பூர் பல்லடம் அருள்புரம் செந்தூரன் காலனியில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கோபாலன்(35) என்பவர் வசித்து வருகிறார். இவர் மனைவி சுசீலா(32). இந்த தம்பதியினர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது கோபாலன் சின்னக்கரை அருகில் உள்ள பனியன் நிறுவனத்திலும் சுசிலா அருள்புரத்தில் உள்ள பனியன் நிறுவனத்திலும் வேலை செய்து வருகின்றனர். கடந்த மே மாதம் 4 ஆம் தேதி வேலைக்கு சென்ற கோபாலன் மாலையில் சின்னக்கரையில் இருந்து லட்சுமி நகர் செல்லும் ரோட்டில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். […]
