அந்தியூர் அருகே வீடு புகுந்து பெண்ணிடம் மிளகாய் பொடியை தூவி ஏழு பவுன் நகையை பறித்துச் சென்ற முகமூடி கொள்ளையனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றார்கள். ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் அருகே இருக்கும் அத்தாணி கருப்பகவுண்டன் புதூரை சேர்ந்த சக்திவேல் என்பவரின் மனைவி விஜயலட்சுமி. சக்திவேல் நேற்று முன் தினம் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் விஜயலட்சுமி தனியாக இருந்துள்ளார். இவர் மதியம் 2:30 மணி அளவில் டிவி பார்த்துக் கொண்டிருந்த பொழுது முகமூடி அணிந்து வந்த […]
