உலகம் முழுவதிலும் கொரோனா நோயாளிகளுக்கு பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்கள் 7 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதிலும் கொரோனா பரவல் தீவிரமடைந்து கொண்டிருக்கும் நிலையில், நோயாளிகளுக்கு துணிச்சலுடன் சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் சுகாதார பணியாளர்களின் சேவை மிகுந்த பாராட்டுக்குரியது. ஆனால் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் உடைகள் உள்ளிட்டவை எதுவும் சரிவர கிடைப்பதில்லை. அதனால் அவர்களின் வாழ்வு பாதிக்கப்படும் நிலையும், அவர்களில் சிலர் உயிரிழக்கும் ஆபத்தும் உண்டாகியுள்ளது. சர்வதேச அமைப்பு இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரை […]
