இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 54, 366 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 690 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,17,306 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 54,366 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 77,61,312 ஆக உயர்ந்துள்ளது. இதில் 6,95,509 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். 69,48,497 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். […]
