தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான கமல்ஹாசனுக்கு திரையுலக பிரபலங்கள் நேற்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளானர். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரும், பல திறமை கொண்டவரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசனுக்கு நேற்று 68-வது பிறந்த நாளாகும். இவரது பிறந்தநாளை தொடர்ந்து மக்கள் நீதிமய்யம் கட்சியினர் தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்தனர். தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். […]
