நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா 2ஆம் அலை காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியில் துணை போலீஸ் சூப்பிரண்டு அதிகாரி ராஜரணவீரன் தலைமையில் போலீசார் அப்பகுதி முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் பரமத்தி வேலூர் மற்றும் ஜேடர்பாளையம் பகுதியில் வாகன சோதனையிலும் ஈடுபட்டுள்ளனர். […]
