கனடாவில் ஒரு பெண்ணிற்கு லாட்டரியில் மிகப்பெரிய தொகை பரிசாகக் கிடைத்திருக்கிறது. கனடாவில் இருக்கும் North Bay என்னும் பகுதியில் வசிக்கும் 67 வயதான Sherry Forsman என்ற பெண்ணிற்கு 4 மகள்கள் மற்றும் 6 பேரக் குழந்தைகள் உள்ளார்கள். இந்நிலையில் இவருக்கு தற்போது மிகப்பெரிய அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. அதாவது, லாட்டரியில் சுமார் 10,00,000 டாலர்கள் பரிசுத்தொகை கிடைத்திருக்கிறது. முதலில், அவர் சுற்றுலாவிற்கு செல்ல திட்டமிட்டிருக்கிறார். மேலும் இந்த பரிசுத்தொகையை தன் மகள்களுக்கு பிரித்து கொடுக்கப் போவதாக கூறியிருக்கிறார்.
