அமெரிக்காவில் வசிக்கும் 63 வயது நபர், 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள லின்கால்ன் என்ற பகுதியில் வசிக்கும் ஆண்ட்ரூ கே கசட் என்ற 63 வயது நபர், கடந்த 2017 ஆம் வருடத்திலிருந்து தற்போது வரை 4 சிறுமிகளிடம் பாலியல் தாக்குதல் நடத்தியுள்ளார். அச்சிறுமிகள் 10 முதல் 15 வயதுடையவர்கள். அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் ஆண்ட்ரூவிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதன் பின்பு அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். […]
