கொட்டி தீர்க்கும் கனமழை மற்றும் பெரு வெள்ளத்தினால் 443 பேர் உயிரிழந்துள்ளனர். தென்ஆப்பிரிக்கா நாட்டில் குவாஜுலு-நேட்டல் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் கடந்த வாரம் திங்கட்கிழமையில் இருந்து பெய்த கனமழை காரணத்தினால் பல்வேறு நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இந்த கன மழையினால் சாலைகள், வீடுகள், பள்ளி கூடங்கள் மற்றும் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதோடு பல அரசு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. மேலும் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனைத்தொடர்ந்து மாகாண நிர்வாக ஒத்துழைப்பு […]
