ஊராடங்கின் விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக லாரியில் மது பாட்டில்களை கடத்திய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள ஆண்டிமடம் பகுதியில் லாரியில் மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர் . அப்போது காவல்துறையினர் நிற்பதை பார்த்தும் அவ்வழியாக வந்த லாரி டிரைவர் மற்றும் உடன் இருந்தவர்கள் வண்டியை சிறிது தூரத்திலேயே நிறுத்தி விட்டு அங்கிருந்து […]
