ஜெர்மனியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 600 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனியில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அந்நாட்டில் கடுமையான கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே போராட்டக்களத்தில் காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் காவல்துறையினர் 10 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் […]
