விபத்தில் உயிரிழந்த சகோதரரின் ஆசையை நிறைவேற்ற அவரது ஆறு சகோதரிகள் செய்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம், கீழ வீதியை சேர்ந்த முருகன் என்பவர் அப்பகுதியில் இலை கடை ஒன்றை நடத்தி வந்தார். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு அவர் ஒரு விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இவருக்கு அட்சய ரத்னா என்ற 13 வயது மகள் உள்ளார். தனது மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழாவை சிறப்பாக செய்ய வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டு உள்ளார். […]
