சட்ட விரோதமாக பதுக்கி வைத்து மது விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் நாமகிரிபேட்டையை அடுத்துள்ள பெரியகொம்பை பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் ஆயில்பட்டி காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் பெரியகொம்பையை சேர்ந்த மாணிக்கம் என்பவர் அவரது வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு […]
