தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அவ்வபோது முதலீட்டாளர்கள் மாநாட்டை அரசு நடத்தி வருகின்றது. இதனிடையே தமிழக முதல்வர் ஸ்டாலின் துபாய் மற்றும் அபுதாபி சென்று 6000 கோடிக்கு அதிகமான தொழில் முதலீடுகளை ஈர்த்து வந்துள்ளார்.இந்நிலையில் தமிழக அரசு இன்று தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் நடத்தி வருகிறது. இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்கியுள்ளார். இதையடுத்து உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. […]
