தெலங்கானா மாநிலத்தில் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாகக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் காலவரையறை இன்றி மூடப்பட்டன. ஊரடங்கில் படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டன. மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது பெற்றோரிடமிருந்து கடிதம் கட்டாயம் சென்று வர வேண்டும் […]
